இந்தியாவில் பாதுகாப்பு காரணத்திற்காக சீன நிறுவனங்களின் 59 செயலிகளை இந்திய அரசு ஜூன் 29 ஆம் தேதி தடை செய்தார்கள். தடைசெய்யப்பட்ட 59 செயலிகளும் தங்களுடைய சேவையை இந்தியாவில் உடனடியாக நிறுத்தினார்கள்.
இதன் காரணமாக இந்த செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்திய ஹலோ மற்றும் டிக் டாக் செயலிகளையும் இந்திய அரசு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட 59 நிறுவனங்களுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கடிதத்தில் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் தடையை மீறி செயல்பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளதாக கூறப்படுகிறது.