மொபைலில் ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

mAadhaar என்கின்ற செயலி மூலமாக உங்கள் மொபைலில் ஆதார் கார்டை மிக எளிதாக டவுன்லோட் செய்யலாம்.இந்த செயலியை பயன்படுத்தி ஆதார் அட்டையை எப்படி PDF வடிவத்தில் டவுன்லோட் செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

சிம்கார்டு வாங்குவதில் துவங்கி பல்வேறு முக்கியமான அரசு சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த ஆதார் கார்டு உங்களது கையில் இல்லாவிட்டாலும், டிஜிட்டல் ஆதார் காப்பி இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று பலரும் நினைப்பீர்கள். 

mAadhaar என்கின்ற செயலி மூலமாக மொபைலில் ஆதார் கார்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

mAadhaar செயலியை பயன்படுத்தி ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் பயனர்களை சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன், புதிய mAadhaar என்கின்ற செயலியை இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது.