BookMyFiber அறிமுகம்! BSNL பிராட்பேண்ட் இணைப்பு எளிதாக பெறலாம்

BSNL BookMyFiber Portal Launched – Apply BSNL Bharat Fiber Broadband Online –

தனியார் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போட்டியாக அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில், தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் BookMyFiber என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் மிக எளிதாக BSNL Fiber பிராட்பேண்ட்  இணைப்பு பெறமுடியும். http://bookmyfiber.bsnl.co.in/ என்கின்ற இணைய முகவரிக்கு வாடிக்கையாளர்கள் சென்றால் பூலோக வரைபடம் காட்டப்படும். அதில் உங்களுடைய இடத்தை தேர்வு செய்து உங்களுடைய மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி உங்களுடைய பெயர் ஆகியவற்றை அனுப்பினால் போதும், அதனைத் தொடர்ந்து ஃபைபர் கனெக்ஷன் திட்டங்கள் பட்டியலிடப்படும். பின்பு உங்களுக்கு ஏற்ற திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் ஃபைபர் இன்டர்நெட் கனெக்ஷன் வழங்கப்பட்டு விடும்.