Facebook 9.99% பங்குகளை Reliance Jio-வில் வாங்கியது

Jio facebook deal : Facebook Buys 9.99 Per Cent In Reliance Jio

பேஸ்புக் மற்றும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனங்களுக்கு இடையே வணிக ஒப்பந்தத்தின் விரைவில் கையெழுத்தாகும் என்ற தகவல் ஏற்கனவே இணையத்தில் கசிந்து வந்தது இந்நிலையில் தற்போது இந்த தகவல்  உண்மையாகியுள்ளது,

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிட்டெட் நிறவனத்தின் 9.99 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.  

388 மில்லியன் வாடிக்கையாளர்ளை பெற்றுள்ள ஜியோ நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கின்றது. Google Pay, Paytm மற்றும் Phone pe போன்ற தளங்களுடன் போட்டியிட Facebook-ற்கு சொந்தமான வாட்ஸ்அப், இந்தியாவில் தனது டிஜிட்டல் கட்டண சேவையை வழங்க ஏற்கனவே ஒப்புதல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனம் JIO நிறுவனத்தின் பங்குகளை  வாங்கியுள்ளது . இந்த ஒப்பந்தம் மூலமாக பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியும் ஜியோ நிறுவனத்தின் JioMart இ-காமர்ஸ் இணைந்து செயலாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.