Zoom Appக்கு மாற்றாக புதிய செயலி கண்டுபிடித்தால் ‘1 கோடி’ பரிசு! – மத்திய அரசு அறிவிப்பு

Government Launches App Challenge “Innovation Challenge for Development of Video Conferencing Solution” 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும்  வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றார்கள். இந்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தி உள்ளார்கள்.

அப்படி வேலை செய்யும் பெரும்பாலான பணியாளர்கள் வீடியோ கான்பரன்சிங் செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றார்கள். அதிலும் சீன நிறுவனத்தின் ஜூம் செயலியை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஜூம் செயலியை தனியார் நிறுவன பணியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட பயன்படுத்தி வந்த நிலையில் இந்த செயலி பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Zoom செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு Zoom Appக்கு மாற்றாக புதிய செயலியை உருவாக்க இந்திய நிறுவனங்களுக்கு அரசு சவால் விடுத்துள்ளது. இந்த சவால் “Innovation Challenge for Development of Video Conferencing Solution” என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Zoom App செயலிக்கு மாற்றாக புதிய செயலியை உருவாக்குவதற்கான திட்டத்திற்கான பதிவு ஏப்ரல் 13 முதல் தொடங்கி, ஏப்ரல் 30 நிறைவடைகிறது. புதிதாக உருவாக்கப்படும் இந்த செயலியில் Encrypted தகவல்தொடர்பு இருக்க வேண்டும், மிக மோசமான நெட்வொர்க் பகுதியில் அதன் வசதியை வழங்க ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகள் இந்த சவாலில் உள்ளது.இந்த சவாலில் முடிவு வருகிற ஜூலை 29 அரசால் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த சவாலில் வெற்றி பெறும் நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.