தமிழகத்துக்கு வரும் ஆப்பிள் நிறுவனம்

Apple-maker Taiwanese company Foxconn to invest $1 bn in Tamil Nadu plant over next 3 years

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையே சண்டை முற்றியுள்ளதால் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இருந்து படிப்படியாக வெளியேற ஆப்பிள் நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தயாராகிவிட்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான், தமிழகத்தில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் ஒரு பில்லியன் டாலர் (ரூ.7,515) கோடி முதலீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்த புதிய ஆலையால் சென்னையில் கூடுதலாக 6,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.