ஜியோவின் “Work From Home” ரூ151, ரூ201, ரூ251 ப்ரீபெய்ட் Add-on packs அறிமுகம்

Jio has also launched new work from home data packs: Rs 151, Rs 201, Rs 251

கொரோனா வைரஸ் காரணமாக பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு “Work From Home” சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்கள்.


சமீபத்தில்தான் ஜியோ நிறுவனம் ரூ.2,399-க்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்தது. தற்போது “Work From Home” ஆட்-ஆன் பேக்கைக் கொண்டு வந்துள்ளது. ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 என்ற ப்ளான்களில் கூடுதலாக 50 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ 2399 ப்ரீபெய்ட் திட்டம் : ஜியோவின் 365 நாட்கள் வேலிடிட்டி பிளான் :

ஜியோ வாடிக்கையாளர்கள் 2399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா,  வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை கிடைக்கும்.

ரூ151, ரூ201, ரூ251 ப்ரீபெய்ட் Add-on packs

 ரூ.151 ப்ளானில் 30 ஜிபி கூடுதல் டேட்டாவும்,  ரூ.201 ப்ளானில் 40 ஜிபி கூடுதல் டேட்டா  மற்றும் ரூ.251 ப்ளானில் 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி பொறுத்த வரைக்கும் தற்போதைய ப்ளான் வேலிடிட்டி முடியும் வரை வாடிக்கையாளர்கள் இதன் சலுகைகளை பெறலாம்.