ஜியோ 2399 ப்ரீபெய்ட் திட்டம் ! 730 ஜிபி டேட்டா ?

Jio prepaid recharge plan 365 days | Jio Launches Rs. 2,399 Annual Prepaid Recharge Plan

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் 2020 ரூபாய்க்கு வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். இந்தத் திட்டத்தை சமீபத்தில் நீக்கிவிட்டு 2,121 ரூபாய்க்கு 336 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா,  வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கினார்கள்.

தற்போது இருக்கும் சூழ்நிலையின் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் டேட்டா தேவைப்படுவதால் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் சில மாற்றங்களை ஜியோ கொண்டு வந்துள்ளார்கள். ஏற்கனவே தினமும் 1.5 ஜிபி டேட்டா கொடுத்தார்கள் ஆனால் தற்போது தினமும் 2 ஜிபி டேட்டா கொடுக்கப் போவதாக ஜியோ அறிவித்துள்ளார்கள்.

ஜியோ 2399 ப்ரீபெய்ட் திட்டம் : ஜியோவின் 365 நாட்கள் வேலிடிட்டி பிளான் :

ஜியோ வாடிக்கையாளர்கள் 2399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா,  வரம்பற்ற ஜியோ டூ ஜியோ குரல் அழைப்பு, 12,000 ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை கிடைக்கும்.