ஜனவரி 1 முதல் சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது : WhatsApp to stop working on these phones from January 2020
பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றார்கள். இந்த வாட்ஸ்அப் அப்ளிகேசனை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 முதல் சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 1, 2020 முதல், ஆண்ட்ராய்டு 2.3.7 இல் இயங்கும் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கசப்பான செய்தி இருக்கின்றது.மைக்ரோசாப்ட் சமீபத்தில் OS மற்றும் வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை கைவிட்டது. அதன் காரணமாக ஜனவரி 1, 2020 முதல் வாட்ஸ் அப் செயலியை விண்டோஸ் பயனாளர்கள் பயன்படுத்த இயலாது.