செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்கின்றது : வோடபோன் ஏர்டெல் அதிரடி | Vodafone airtel price hike in tamilnadu – Tech News in Tamil

செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்கின்றது : வோடபோன் ஏர்டெல் அதிரடி | Vodafone airtel price hike in tamilnadu – Tech News in Tamil


வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஏற்கனவே வோடாஃபோன் நிறுவனம் தன்னுடைய சேவையை நிறுத்தப்போவதாக சில தகவல்கள் வெளிவந்தன. மற்ற நாடுகளை விட இந்தியாவில் டேட்டா கட்டணம் மிக குறைவு அதன் காரணமாகத்தான் இந்த நஷ்டம் என கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி ஜியோ வருகைக்கு பின்பு டேட்டா பயன்படுத்தவும் கால் பேசவும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துகின்றார்கள். மொபைல் போனில் இருக்கும் மற்றொரு sim slot இல்  ஏர்டெல் வோடாபோன் பயன்படுத்துகின்றார்கள். இதற்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சரியாக ரீசார்ஜ் செய்யவில்லை என கூறப்படுகிறது.


இந்த நஷ்டத்தை கருத்தில் கொண்டு இரு நிறுவனங்களும் இணைந்து டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த தீர்மானித்துள்ளது. அது மட்டுமின்றி 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 பில்லியன் இந்தியர்களுக்கு 4ஜி சேவையை வழங்குவோம் என உறுதி எடுத்துள்ளது.