Redmi 9i விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றது

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் தொடங்கி ரெட்மி 9A வரையில் அறிமுகம் செய்துவிட்டார்கள். அந்த வரிசையில் தற்போது ரெட்மி நிறுவனம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் ரெட்மி 9ஐ ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் பற்றின பல்வேறு தகவல்கள் கசிந்து வருகிறது அதன்படி இதில் 4ஜிபி ரேம், வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் இருப்பதாக தெரிகிறது. மேலும், MiUI 12-ல் இந்த மொபைல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 9, ரெட்மி 9A, ரெட்மி 9 பிரைம்  ஸ்மார்ட்போன்கள் தற்போது பத்தாயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது ரெட்மி 9ஐ மொபைலின் ஆரம்ப விலை பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.