இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ பயனாளர்கள் இலவசமாக பார்க்கலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க வேண்டுமா ?
இந்தியா vs இங்கிலாந்து 2021 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரை Jio TV app மூலமாக இலவசமாக பார்க்கலாம் என்று ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளார்கள். இதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பிப்ரவரி 5 துவங்கி மார்ச் 28 வரை இந்திய அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த அனைத்துப் போட்டிகளும் Jio TV app மூலமாக ஜியோ பயனர்களுக்கு இலவசமாக பார்க்க கிடைக்கின்றது மேலும் நேரலை போட்டிகள் மட்டுமின்றி, ஹைலைட்களையும் பார்க்க முடியும்.
Jio TV app கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரராக இல்லாவிட்டால், டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற பிற OTT தளங்களில் ஆன்லைனில் போட்டிகளைக் காணலாம்.