செல்போன் விற்பனை இந்தியாவில் வீழ்ச்சி

Indian Smartphone market to decline by 15% due to COVID-19

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு  அமலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு  முன்  இந்தியாவில் மொபைல்  விற்பனை மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது மக்களிடம் பணம் புழங்குவது மிகவும் குறைந்துவிட்டதால் மொபைல் போன்களை  வாங்குவது குறைந்துள்ளது. 

அதுமட்டுமின்றி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது இதன் காரணமாக மொபைல் போன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது, இதன்காரணமாக தற்போதைய சூழ்நிலையில் புதிய போன்களை வாங்குவதற்கு மக்களிடம் விருப்பம் இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் இந்தியாவில் 15 சதவீதம் செல்போன் விற்பனை சரிந்திருப்பதாக தெரிந்துள்ளது.