விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி20 என்கின்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை சிறப்பம்சங்கள் மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
விவோ நிறுவனம் தனது வி தொடரின் கீழ் விவோ வி20 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி ஆகிய மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்,4,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
விவோ வி20 இந்திய விலை :
விவோ வி20 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.24,990 க்கும், இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடலானது ரூ.27,990 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது
விவோ வி20 எப்போது விற்பனைக்கு வருகின்றது ?
விவோ வி20 வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும்.
Vivo V20 – Full phone specifications
Launch Date | 2020, October 13 |
Display | 6.44 inc FHD+ AMOLED Display |
Weight | 172g |
Colors | Sunset Melody, Midnight Jazz, Moonlight Sonata |
SIM | Triple Card Slot ( 2 Nano-SIM + 1 Micro SD Card) |
Expandable Memory | Dedicated Slot (Expandable Upto 256 GB) |
Rear camera | 64MP + 8MP + 2MP |
Video(Rear) | 4K@30fps, 1080p@30/60fps, |
Front camera | 44 MP Front Camera |
Video (Front) | 4K@30fps, 1080p@30fps |
Fingerprint sensor | In-Display Fingerprint sensor |
Chipset | Qualcomm Snapdragon 720G |
GPU | Adreno 618 |
OS | Funtouch OS 11 |
UI | Android 11 |
BATTERY | 4000 mAh Lithium-ion Battery |
Charging | 33W Fast Charging |