சாம்சங் கேலக்ஸி A51 Mid Range விலையில் வாங்கலாமா ?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ 51 மொபைல் போனின் விமர்சனம் மற்றும் இந்திய விலை பற்றி பார்க்கலாம்.

சாம்சங் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A51 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் ஏற்கனவே சாம்சங் அறிமுகம் செய்திருந்த கேலக்ஸி ஏ 50 எஸ் ஸ்மார்ட்போனில் இருந்து சில விஷயங்களை தக்க வைத்துக் கொண்டு பல புதிய சிறப்பு அம்சங்களை சேர்த்து இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 51 மொபைலை சாம்சங் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் அளவிலான முழு எச்டி+ சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளே, எக்ஸினோஸ் 9611 சிப்செட்டால், 4000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A51 இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
6 GB128 GBRs. 22,999amazon
8 GB128 GBRs. 24,498amazon

சாம்சங் கேலக்ஸி A51 சிறப்பம்சங்கள் :

Launch Date2020,January 
Display6.5 inches 20:9 ratio Super AMOLED
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight172 g
ColorsBlue, White, Black, Haze Crush Silver, Metallic Silver
SIMDual SIM dual-standby (4G+4G)
Expandable MemoryExpandable up to 512GB
Rear camera48MP (F1.8)+12MP (F2.2)+5MP(F2.2)+5MP(F2.4)
Video(Rear)4K@30fps, 1080p@30/120fps; gyro-EIS
Front camera32MP front facing camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorInDisplay Fingerprint sensor
ChipsetExynos 9611 octa core processor
GPUMali-G72 MP3
OSAndroid 10.0
BATTERY4000mAH lithium-ion battery
Charging15W Fast charging

Samsung Galaxy A51 Mid Range விலையில் வாங்கலாமா ?

இதெல்லாம் இருந்திருந்தால் இந்த மொபைல் நல்லா இருந்திருக்கலாம் ?

Mid Range விலையில் தற்போது அறிமுகமாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் 27W, 30W, 65W Fast charging வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மொபைலில் 15W Fast charging வசதி மட்டுமே உள்ளது.

அதேபோல் சாம்சங் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த Samsung Galaxy M31, Samsung Galaxy M21 மொபைலில் இந்த மொபைலில் பயன்படுத்திய Exynos 9611 பிராசஸர் தான் பயன்படுத்தி உள்ளார்கள் ஆனால் அந்த மொபைல் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றது ஆனால் இந்த மொபைலின் விலை சற்று அதிகம் தான். 

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரெட்மி ரியல்மி போக்கோ  ஆகிய மொபைல்களுக்கு மாற்றாக வேறு ஒரு மொபைல் வேண்டுமென்றால் இந்த மொபைல் உங்கள் தேர்வுக்கு சரியாக இருக்கும்.