மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் இன் 1 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் சிறப்பம்சங்கள் விலை மற்றும் எப்போது விற்பனைக்கு வருகிறது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்..
Read in : English
இந்திய நாட்டை சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் இன் 1 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் பர்பிள் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி + டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பின்புறம் கைரேகை சென்சார்,மீடியாடெக் ஹீலியி ஜி80 பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் மார்ச் 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைத்தளம் வழியாக நடக்கும் முதல் விற்பனையில் இந்த இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Micromax In 1 – Full phone specifications
Launch Date | 19 March 2021 |
Display | 6.67-inch IPS LCD full-HD+ |
Build | Glass front , plastic frame |
Weight | 195 g |
Colors | Blue, Purple |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Expandable Upto 256 GB |
Rear camera | 48-MP primary sensor. 2-MP depth, 2-MP macro camera |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 8 MP |
Video(Rear) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | MediaTek Helio G80 SoC (12 nm) |
GPU | Mali-G52 MC2 |
OS | Android 10 |
BATTERY | 5,000mAh battery |
Charging | 18W fast charging |