ஜியோ புத்தாண்டு சலுகையாக ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது..
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டில் ஜியோவில் இருந்து பிற நெட்வொர்க் எண்ளுக்கு வாடிக்கையாளர்கள் அழைக்கும்போது நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்க துவங்கியது. இது பல்வேறு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அதாவது மற்ற நெட்வொர்க் எண்களுக்கான வாய்ஸ் கால் சேவையை ஜியோ இலவசமாக வழங்குகிறது. இந்த புதிய சலுகை ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது.