புதிய மொபைல் வாங்க வேண்டும் என்றால் இந்த மாதமே வாங்கி விடுங்கள் ? ஏன் எதற்கு ?

GST on mobile phones hiked to 18% from 12%

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் கடும் போட்டி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் குறைந்த விலையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மொபைல் போனுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தினார்கள். இதற்கு முன்னர் 12 சதவீத வரி நடைமுறையில் இருந்தது.

இதன் காரணமாக மொபைல் போன்களின் விலை 5 முதல் 10 சதவீதம் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரி உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

இந்த மார்ச் மாதத்தில் இந்த விலை உயர்வு இருக்காது எனக் கூறப்படுகிறது இதன் காரணமாக பல்வேறு நபர்கள் இந்த மாதத்தில் அதிகம் மொபைல் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.