டாக்டைம் தீர்ந்து போன வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் ! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை

Corona Lockdown : BSNL to Offer Free Rs 10 Talk Time, extend prepaid validity up to April 20

பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். தற்போது ஏப்ரல் 14 வரை இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றார்கள், அனைத்து ரீச்சார்ஜ்  கடைகளும் மூடியதால், பலர் ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல மக்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் மார்ச் 22 ஆம் தேதிக்கு பின் வேலிடிட்டி நிறைவுற்ற வாடிக்கையாளர்களின் வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.

அதேபோல் டாக்டைம் தீர்ந்து போன வாடிக்கையாளர்களுக்கு  ரூபாய் 10 டாக்டைம் இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்கள்.