4 சதவீதம் கேஷ்பேக் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்

BSNL to give 4 per cent discount to users recharging for other BSNL users

ஊரடங்கு காரணமாக ரீசார்ஜ் கடைகள் இயங்கவில்லை இதன்காரணமாக ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்யத் தெரியாத வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

இதன் காரணமாக ஏற்கனவே ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மற்ற எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்தன. 

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் இதே சலுகையை அறிவித்துள்ளது. மை பிஎஸ்என்எல் செயலிக்கான 2.0.46 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக பிஎஸ்என்எல் பயனாளர்கள் பிற பிஎஸ்என்எல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து கொடுத்தால் 4% கேஷ்பேக்  கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த சலுகை மே 31ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.