பிஎஸ்என்எல் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் ! ரூ.49-க்கு புதிய பிளான் அறிமுகம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் 49 ரூபாய்க்கு புதிய பிளான் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரையில் இந்த பிளான் இருக்கும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த பிளானில் உள்ள பலன்கள், வேலிடிட்டி உள்ளிட்ட அம்சங்களை பற்றிப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் மொத்தமாக 2 ஜிபி டேட்டா, 100 நிமிட இலவச அழைப்பு நன்மைகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த புதிய திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும். இது தற்சமயம் தமிழ்நாடு, சென்னை வட்டங்களில் மட்டும் கிடைக்கிறது.
BSNL : வெறும் ரூ.49-க்கு புதிய பிளான் அறிமுகம்..#BSNL49 #BSNL pic.twitter.com/lEl4h2K8Es
— Red Tech Tamizha (@Redtechtamizha) September 10, 2020