பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னுடைய எஸ்.டி.வி 395 திட்டத்தின் நன்மைகளை குறைத்துள்ளார். இதன்காரணமாக BSNL ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றார்கள்.
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்.டி.வி 395 திட்டத்தின் மீது அதிரடி திருத்தம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இப்போது திருத்தப்பட்ட எஸ்.டி.வி 395 ஆனது 3000 ஆன்-நெட் நிமிடங்கள் மற்றும் 1800 ஆஃப்-நெட் நிமிடங்களை வழங்கும்.மேலும் இப்போது குறிப்பிட்ட இலவச நிமிடங்களுக்கு பிறகு அனைத்து குரல் அழைப்புகளும் நிமிடத்திற்கு 20 பைசா என்கிற விகிதத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படும்.
முன்னதாக இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை பிஎஸ்என்எல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அழைப்பு நன்மைகளை தவிர்த்து, எஸ்.டி.வி 395 ஆனது 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையையும் வழங்குகிறது, இது 71 நாட்களுக்கு செல்லுபடியாகும்.