பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ஆஃபர் : Bsnl 1999 Plan Details in Tamil

BSNL Tamilnadu Mobile Recharge Plan for 1999 : BSNL Rs. 1,999 Prepaid Plan 71-Day Additional Validity

பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு தங்களுடைய ரூ.1,999 ப்ரீபெய்ட் ப்ளானை 71 நாட்களாக அதிகரித்தது.. இந்த சலுகை ஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020-க்கு இடையில் ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை கொடுத்தார்கள்.

தற்போது மீண்டும் இந்த சலுகையை பிப்ரவரி 29 வரை நீட்டிப்பு செய்துள்ளார்கள். இதன் மூலமாக ரூ.1,999 க்கு பிப்ரவரி 29 க்கு முன் ரீசார்ஜ் செய்தால் 436 நாட்கள் வேலிடிட்டியாகும்.தினசரி 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு(ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பு), தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.