New Facebook Update 2019 : இனி ஃபேஸ்புக்கில் லைக்குகளை பார்க்க முடியாது – Tech News in Tamil
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கை பலர் பயன்படுத்துகின்றனர். இதில் பலர் அதிகம் எதிர்பார்ப்பது லைக் தான். லைக் வேண்டும் என்பதற்காக சில தேவையற்ற பதிவுகளை பதிவு செய்கின்றனர். அது ஃபேஸ்புக்கில் தரத்தை குறைகின்றது என்ற விமர்சனமும் உண்டு.
ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் சோதனை அடிப்படையில் லைக்கை மறைக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் லைக்கை பார்க்க முடியும் ஆனால் மற்றவர்கள் அந்த லைக்கை பார்க்க முடியாது.
இந்த வசதி ஃபேஸ்புக்கில் கூடிய சீக்கிரம் வரப்போகிறது. அதுமட்டுமின்றி பேஸ்புக்கில் இருக்கும் மற்றொரு குறைபாடு பேஸ்புக்கில் எந்த ஒரு நபருக்கும் மெசேஜ் செய்யலாம், இந்த வசதியும் விரைவில் மாற்றி அமைக்கப்படும், இனி பேஸ்புக்கில் தாங்கள் பின்தொடர்பவர்கள் மற்றுமே தங்களுக்கு மெசேஜ் செய்ய முடியும் என்ற வசதியை பயனர்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.