JIOக்கு எதிராக திரும்பிய ஏர்டெல் வோடபோன் : Vodafone Idea and Airtel, Removes FUP Limit on Voice Calls for All Unlimited Prepaid Plan

JIOக்கு எதிராக திரும்பிய ஏர்டெல் வோடபோன் : Vodafone Idea and Airtel, Removes FUP Limit on Voice Calls for All Unlimited Prepaid Plan


பெரும்பாலான செல் போன் பயனாளர்கள் அன்லிமிட்டட் பிளான்களுக்கு தான் ரீசார்ஜ் செய்கின்றார்கள். ஜியோ வருகைக்கு பின்பு பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வந்தார்கள்.


ஆனால் தற்போது அந்த சலுகைகளை ஒவ்வொன்றாக குறைத்துவிட்டார்கள் சமீபத்தில் FUP (Fair Usage Policy) என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். இதன் மூலமாக நீங்கள் ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கு நீங்கள் பேச வேண்டும் என்றால் அந்த நெட்வொர்க் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மற்றும் இலவசமாக கொடுப்பார்கள். அதன் பிறகு நீங்கள் ரீ-சார்ஜ் செய்து அந்த நிமிடங்களை நீங்கள் நீட்டிப்பு செய்யலாம்.


இந்த FUP (Fair Usage Policy) திட்டத்தை ஏர்டெல் வோடாஃபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் கூட்டாக இணைந்து கட்டணங்களை அதிரடியாக அதிகரித்தது.


தற்போது ஜியோ விற்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் FUP (Fair Usage Policy) இந்த திட்டத்தை விளக்கி உள்ளது. இதன் மூலமாக ஏர்டெல் மற்றும் வோடாபோன் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கும் அன்லிமிட்டட் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.