எதற்காக Device Drivers அல்லது Hardware Drivers பயன்படுத்தப்படுகிறது ?
இன்றைய நவீன உலகில் கணினி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகின்றனர். இதில் அனைவரும் OS இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறோம்.
சில நேரங்களில் நம்முடைய கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்யாது குறிப்பாக வீடியோ பிளேயரில் வீடியோ பார்க்கும்போது நின்று நின்று அந்த வீடியோ Play ஆகும், பிரிண்டர் அல்லது ஏதேனும் ஹார்ட்வேர் நம்முடைய கம்ப்யூட்டரில் இணைக்கும்போது அது சரியான முறையில் வேலை செய்யாது.
இந்தப் பிரச்சனைகள் எதற்காக வருகிறது என்றால் நம்முடைய கம்ப்யூட்டரில் Device Drivers அல்லது Hardware Drivers சரியாக இன்ஸ்டால் செய்யவில்லை என்று அர்த்தம்.
எதற்காக Device Drivers அல்லது Hardware Drivers பயன்படுத்தப்படுகிறது ?
Device Drivers அல்லது Hardware Drivers எதற்காக பயன்படுகிறது என்றால் நம்முடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேல் உள்ள Hardwareஐ Communicate செய்வதற்காக பயன்படுகிறது.
Device Drivers அல்லது Hardware Drivers சரியாக இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் ஹார்டுவேர் சரியாக வேலை செய்யாது.