10 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ரெட்மி சாதனை : Redmi Sells 10 Million Redmi Note 8 Phones in Just Three Months | Tech News in Tamil
ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 8 சீரிஸ் மொபைல் போன்களை August 29ஆம் தேதி சைனாவில் அறிமுகம் செய்தது. இதையடுத்து இந்த மொபைல் போன்களை இந்தியாவில் October 16ம் தேதி அறிமுகம் செய்தது.
இந்த கைபேசிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரும்பாலான மக்கள் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட கைப்பேசிகளை விரும்பி வாங்குவதால்.
ரெட்மி நோட் 8 சீரியஸ் மொபைல் போன்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்தது. இந்தியா மற்றும் அல்லாமல் பிற நாடுகளிலும் இந்த நோட் 8 சீரிஸ் மொபைல் போன்களின் விற்பனை அதிகரித்தது.
தற்போது இந்த ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்து மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ளது. இந்த மூன்று மாதங்களில் நோட் 8 சீரிஸ் மொபைல் போன்கள் ஒரு கோடி யூனிட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஒரு மாதத்தில் 10 லட்சம் போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த விற்பனை சாதனையை ரெட்மி நிறுவனம் கொண்டாடி வருகின்றது.