இனி எல்லாம் 5ஜி மொபைல் தான் : ஜியோமி அதிரடி| 5G for all Xiaomi flagship smartphones in 2020 - Tech News in Tamilஇந்தியாவில் ஜியோ வருகைக்கு பின்பு 4G மொபைல் போனில் விற்பனையும் அதிகரித்தது. தற்போது 4G க்கு அடுத்தபடியாக வாடிக்கையாளர்கள் 5G சேவை இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டால் அதற்கான 5ஜி மொபைல் போன் சந்தையில் அறிமுகம் செய்வதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும்.

2020 ஆம் ஆண்டு 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்காக ஜியோமி தற்போது தயாராகி வருகிறது. 

ஜியோமி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு வெளியிடும் அனைத்து மொபைல்களும் 5G சேவை உள்ள ஸ்மார்ட் போனாக இருக்கும் என கூறியுள்ளது. இந்த மொபைல் போனின் விலை 20,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு சுமார் 10, 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவிட வேண்டும் என்பது ஜியோமியின் குறிக்கோளாக உள்ளது. முதலாவதாக ஜியோமி Mi Mix 3 5G மற்றும் ஜியோமி Mi Mix Alpha ஆகிய போன்கள் வெளியாக உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஜியோமி சிஇஓ லீ ஜுன் வெளியிட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post