வோடபோன் சேவையை நிறுத்தப் போகிறது ? Vodafone says not leaving India

வோடபோன் சேவையை நிறுத்தப் போகிறது ? Vodafone says not leaving India

credit : Vodafone 

ஜியோ வருகைக்குப் பின்னர் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றன. ஏற்கனவே ஏர்செல் நிறுவனம் நஷ்டம் காரணமாக சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் மத்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் படி வருவாய் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனால் வோடாஃபோன் நிறுவனம் 28,309 கோடி ரூபாயை மூன்று மாதத்துக்கு செலுத்த வேண்டிய நெருக்கடியை சந்தித்தது.


இதன் காரணமாக வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய சேவையை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியது. இதைப்பற்றிய நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது அதாவது இந்தியாவில் சேவையை நிறுத்த எந்த ஒரு எண்ணமும் இல்லை என வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.