உங்களுடைய வாட்ஸப் தகவல் திருடப்படுகிறதா ? Whatsapp Voice Calls Israeli Spyware

உங்களுடைய வாட்ஸப் தகவல் திருடப்படுகிறதா ? Whatsapp Voice Calls Israeli Spyware


வாட்ஸ்அப் மென்பொருளில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இதைக் கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கியது. இந்தியாவில்தான் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்கள் அதிகம்.


தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பெல்லாபாட்டியா என்பவரது வழக்கறிஞர் நிகல்சிங் மத்திய அரசிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரை எடுத்து வாட்சப் ஹேக் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.



இஸ்ரேலை மையமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் இந்த உளவு வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்த உளவு வேலைக்கு உதவியது சில நாடுகளில் இருக்கும் உளவு அமைப்புகள் என்று கூறப்படுகிறது.


முதலில் ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் அப் எண்ணிற்கு அழைப்பு வரும் அந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.  உங்களுடை மொபைலில் ஒரு மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்களுடைய தகவல் திருடப்படுகிறது .


இந்த தகவலை வாட்ஸ்ஆப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.