வீடியோ வைரஸ் மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் திருடப்படுகிறது : WhatsApp Confirms a New MP4 Threat | Tech News in Tamil

வீடியோ வைரஸ் மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் திருடப்படுகிறது : WhatsApp Confirms a New MP4 Threat


பெரும்பாலான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றார்கள். சமீபத்தில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்டுத்துபவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் அண்மையில் புயலைக் கிளப்பியது. இதையடுத்து இந்திய அரசாங்கமும் வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து விளக்கம் கேட்டிருந்தது.


இந்நிலையில் வாட்ஸ்அப் செயலிக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தல் வந்துள்ளது. வாட்ஸ்அப்பிற்கு எம்.பி.4 வகை வீடியோ ஒன்றை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்கள் தகவலை திருடும் அபாயம் உள்ளதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.


இந்த தாக்குதலில் இருந்து உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை பாதுகாக்க உடனே ப்ளே ஸ்டோருக்கு சென்று உங்களுடைய வாட்ஸ்அப் அப்ளிகேஷனை அப்டேட் செய்யுமாறு வாட்ஸ்அப் கேட்டுக்கொண்டுள்ளது