புதிய அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப் : Now WhatsApp’s fingerprint unlock feature is now on Android – Tech News in Tamil

புதிய அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப் : Now WhatsApp’s fingerprint unlock feature is now on Android

Credit : WhatsApp

வாட்ஸ்அப் செயலி பற்றி பல்வேறு சர்ச்சைகள் வந்தாலும் உலகளவில் அதிக மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன் படுத்துகின்றார்கள். இந்த வாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்து உள்ளார்கள்.

ஏற்கனவே ஐஃபோன்களில் கைரேகை மூலம் செயலியைத் திறக்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்தது. தற்போது ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் கைரேகை மூலம் செயலியைத் திறக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பயனாளர்கள் இந்த வசதியைப் பெற வாட்ஸ்அப்பின் புதிய வெர்சனை டவுன்லோடு செய்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது.