YouTube updating Terms of Service on 10 December, 2019 : YouTube channels with inadequate income are removed from YouTube
Credit : youtube
இந்தியாவில் ஜியோ வருகைக்கு பின்பு வீடியோ பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் யூடியூப் தளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
யூடியூப்-க்கு போட்டியாக பல்வேறு வீடியோ பார்க்கும் தளங்கள் தற்போது வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு போட்டி கொடுக்கும் விதமாக யூடியூப் பல்வேறு புதிய விதிமுறைகளை விரைவில் கொண்டுவரப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏற்கெனவே யூடியூபில் பல தரமற்ற வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என்ற காரணத்திற்காக ஒரு ஆண்டிற்குள் ஆயிரம் சந்தாதாரர்கள் மற்றும் 4000 மணி நேரம் உங்களுடைய வீடியோக்களை பார்த்தால் மட்டும் தான் யூடியூபில் விளம்பரம் உங்கள் சேனலில் வரும் என அதிரடி அறிவிப்பை ஏற்கனவே யூடியூப் வெளியிட்டது.
ஆனாலும் யூடியூபில் பல்வேறு தரமற்ற சேனல்கள் இருக்கின்றது. சேனல் ஆரம்பிப்பதற்காக எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனலை அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு சேனலை துவக்கலாம்.
இதன் காரணமாக யூடியூப் சேனல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது அது மட்டும் அல்லாமல் யூடியூபில் பல்வேறு சேனல்கள் தரமற்ற வீடியோக்கள் பதிவு செய்து கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி எந்த ஒரு வருமானமும் இல்லாமல் யூட்யூப் தளத்தில் அவர்கள் சில வீடியோக்களை பதிவு செய்யப்பட்டு வெளியிடுகிறார்கள்.
இதன் காரணமாக யூடியூப் கழுத்தின் கீழ் இருக்கும் தரம் குறைந்து கொண்டே வருவதாக யூடியூப் கருதுகின்றது. இதன் காரணமாக யூடியூபில் வருமானம் இல்லாமல் இயங்கி வரும் யூடியூப் சேனலை யூடியூப் வெளியிட்டு இருக்கின்றது.
இதில் புதிய விதிமுறைகளை யூடியூப் ஏற்கனவே அனைத்து யூடியூப் சேனல்கள் மூலமாக தெரிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் பெரும்பாலும் அனைத்து விடுதிகளுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. யூட்யூப் தளம் இப்புதிய விதியை வருகிற டிசம்பர் 10-ம் தேதி முதலே செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.