How to spy on someones WhatsApp account How to Know Who Viewed Your Whatsapp Profile in Tamil
வாட்ஸ்அப் தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். நம்முடைய வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை யாரெல்லாம் அடிக்கடி வந்து பார்க்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வம் உண்டு.
அந்தத் தகவல்களை பார்க்க வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வசதிகள் கிடையாது. எனவே அதைத் தெரிந்து கொள்வதற்காக பலரும் பல அப்ளிகேஷன்களை பயன்படுத்தி வருகின்றார்கள். இவ்வகையான அப்ளிகேஷன்கள் பாதுகாப்பானது அல்ல எனக் கருதி கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து இவ்வகை அப்ளிகேசன்களை நீக்கியது.
உங்கள் வாட்ஸ் அப் ப்ரொபைல் Picture-ஐ யார் யார் பார்க்கின்றார்கள் என்பதை நீங்கள் கண்டறிய அப்ளிகேஷன் இருக்கின்றது ஆனால் அவ்வகை அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது இதன் மூலமாக உங்களுடைய மொபைல் போனில் இருக்கும் கைபேசி எண்கள், உங்கள் கைப்பேசியில் இருக்கும் தகவல்கள் மற்றும் நீங்கள் இருக்கும் இடம் இது போன்ற பல்வேறு தகவல்களை அவர்கள் தவறாக பயன் படுத்தலாம்.
எனவே இது போல உள்ள அப்ளிகேஷனை நம்பி உங்களுடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எப்படி உங்களுடைய மொபைல் போனிலிருந்து தகவல்கள் திருடப்படுகின்றன என்பதைப் பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
How to spy on someones WhatsApp account How to Know Who Viewed Your Whatsapp Profile in Tamil