கொண்டாட்டத்தில் ரெட்மி ! இந்த தீபாவளிக்கு எவ்வளவு விற்பனை தெரியுமா ? Xiaomi Says Sold 12 Million Devices During the Diwali Festive Sales
இந்தியாவில் குறைந்த விலைக்கு அதிக மொபைல் போன்களை ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. குறிப்பாக 5,000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ரெட்மி பல மொபைல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது .
ரெட்மி தான் தற்போது இந்திய அளவில் மொபைல் போன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறார்கள். தீபாவளிக்கு பல சலுகைகளை கொடுத்து ரெட்மி நிறுவனம் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியது.
தற்போது எவ்வளவு பொருட்களை தீபாவளிக்கு நாங்கள் விற்பனை செய்தோம் என்ற தகவலை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
8.5 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் மற்றும் 3 மில்லியன் ரெட்மி இன் இதர பொருட்கள் மொத்தம் 12 மில்லியன் ரெட்மின் தயாரிப்புகளை இந்த தீபாவளி விற்பனையில் விற்பனை செய்துள்ளதாக சியோமி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.