ஒரு சிலருக்கு மட்டும் இலவசமாக பேசும் வசதியை ஜியோ அறிவித்தது : Jio IUC Top-Up Vouchers Detailed
ஜியோ நிறுவனம் சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ எண்ணிற்கு பேசப்படும் கால்கள் அனைத்தும் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.
ஆனால் ஜியோ வில் இருந்து வேறு எண்ணிற்கு பேசினால் நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என ஜியோ அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் அனைத்து கால்களும் இலவசமாக பேச வேண்டும் என்றால் மற்றவர்களை ஜியோ குடும்பத்தில் இணைய சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டது.
தற்போது ஜியோ கொடுத்திருக்கும் ஓர் அறிவிப்பு என்னவென்றால் அக்டோபர் 9ஆம் தேதிக்கு முன்னர் நீங்கள் ரீ-சார்ஜ் செய்து இருந்தால் இலவச வாய்ஸ் கால் சேவை வேலிடிட்டி இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.
அதன் பின்னர் ஜியோ நிறுவனம் அறிவித்த 4 ஐ.யு.சி. டாப் அப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் ஆரம்ப விலை ரூ. 10-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.