இனி மாதம்தோறும் 35 ரூபாய் செலுத்த வேண்டாம் : கட்டணத்தை குறைந்தது வோடாபோன்

Vodafone Prepaid Monthly Minimum Recharge – Tech News In Tamil

தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு முன் ஏர்டெல் மற்றும் வோடாபோன் இரு நிறுவனங்களும் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தன.


ஜியோ வந்த பின்பு பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்தது அதனால் அனைவரும் ஜியோவுக்கு மாறினர். இந்தியாவில் பெரும்பாலும் 2 சிம் கார்ட் வசதி உள்ள மொபைல் போனை பயன்படுத்துகிறார்கள். இதில் பெரும்பாலும் ஜியோ வருகைக்கு பின் ஜியோக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்கின்றார்கள்.  அவர்கள் பயன்படுத்தும் மற்ற Sim க்கு ரீசார்ஜ் செய்வதில்லை.


இப்படி ரீசார்ஜ் செய்யாமல் இருப்பதால் அந்த நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் வோடாபோன் 30 நாட்களுக்கு 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் சிம்கார்டு  ஆக்டிவ் இல் இருக்கும் என்று கொண்டு வந்தது.


தற்போது இந்த கட்டணத்தை வோடபோன் குறைத்துள்ளது இனி 28 நாட்களுக்கு 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என வோடஃபோன் அறிவித்துள்ளது