Google Pixel 4A இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்ளோதானா?

கூகுள் பிக்சல் 4a மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன்  சிறப்பம்சங்கள், விலை மற்றும் எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது என்பதை பற்றி பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 4ஏ மொபைல் மாடல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உலக சந்தைகளுக்கு தோராயமாக ரூ.25,500 க்கு அறிமுகம் செய்தார்கள் இதன் காரணமாக இந்த மொபைல் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. தற்போது இரண்டு மாதங்கள் கழித்து கூகுள் பிக்சல் 4a மொபைல் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, பின்புறத்தில் சதுர வடிவ கேமரா வடிவமைப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.மேலும் புகைப்படம் எடுப்பதற்காக 12 எம்பி பின்புற கேமரா எஃப்1.7 லென்ஸ் உடன் வருகிறது. செல்பி கேமராவிற்கென முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.இது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி எஸ்ஓசி மூலம்இயக்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 4ஏ இந்திய விலை :

கூகுள் பிக்சல் 4ஏ அறிமுக சலுகையாக இந்த மொபைல்6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும்.

RamInternal StoragePriceBuy
6 GB128 GBRs. 29,999Flipkart

கூகுள் பிக்சல் 4ஏ எப்பொழுது  விற்பனைக்கு வருகின்றது :

கூகுள் பிக்சல் 4ஏ மொபைல் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றது.

Launch Date2020, Oct 09
Display5.81 inches 19.5:9 ratio full-HD+ OLED display 
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight143 g
ColorsJust Black
SIMNano-SIM and/or eSIM
Expandable MemoryNo
Rear camera12-megapixel camera sensor at the back, along with an f/1.7 lens and an LED flash module.  ( OIS)
Video(Rear)4K@30fps, 1080p@30/60/120fps; gyro-EIS
Front camera 8-megapixel camera sensor at the front, with an f/2.0 lens
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetSnapdragon 730G
GPUAdreno 618
OSAndroid 10 
BATTERY3,140mAh 
Charging18W Fast charging