Gmail-ல் Smart Reply என்கின்ற புதிய அம்சம் அறிமுகம்

கூகுள் ஜிமெயில் Smart Reply என்கின்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

நிறுவனங்கள் அனைத்தும் தற்போது கணினி மையம் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் பல்வேறு வேலைகள் இருந்தாலும் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு ரிப்ளை கொடுப்பதற்கு அதிகம் நேரத்தை செலவிட்டு வருகின்றார்கள். இதற்குத் தீர்வாக Gmail-ல் Smart Reply என்கின்ற புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.

இந்த புதிய அம்சம் மூலமாக மின்னஞ்சல்களுக்கு செலவிடும் நேரத்தை வெகுவாக குறைக்கலாம். கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை சேவையானது ஒருவருக்கு வரும் மின்னஞ்சல்களை படித்து அதற்கு ஏற்ப, மூன்று விதமான பதில்களை உங்களுக்கு கொடுக்கும். அதை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து நீங்கள் பதிலளிக்கலாம் இல்லை என்றால் அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு நீங்கள் எளிதாக Reply செய்யலாம்.


இந்த புதிய அம்சம் ஜிமெயில் மேம்படுத்தப்பட்ட வடிமான இன்பாக்ஸ் செயலியை பயன்படுத்தும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் இந்த Smart Reply வசதியை இலவசமாக பயன்படுத்த முடியும்.