மொபைல் கட்டணங்கள் 10% உயருகிறது ? காரணம் என்ன

Telecom tariff hike : Your voice call rates may soon rise 10%

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது கடும் நிதி சிக்கலில் இருக்கின்றார்கள். இந்நிலையில் படிப்படியாக தங்களுடைய கட்டணங்களை உயர்த்தி வருகின்றார்கள்.

சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பரிசீலித்த நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை கட்டணங்களை நிர்ணயம் செய்ய அனுமதி அளித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய ரீச்சார்ஜ் கட்டணங்களை 5 முதல் 10 சதவிகிதம் உயர்த்தக் கூடும் என தெரிகிறது.