எப்படி ஏடிஎம் மெஷின் வழியாக ஜியோ ரீசார்ஜ் செய்வது ?

How To Recharge Jio Through ATM : Reliance Jio number can now be recharged via ATM

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரங்கம் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு பல்வேறு கஷ்டங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய கைபேசியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்த தடை உத்தரவு காரணமாக ரீ சார்ஜ் கடைகள் எதுவும் இல்லாததினால் பலரும் ஆன்லைன் ரீசார்ஜ் செய்து வருகின்றார்கள். ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய தெரியாதவர்களுக்கு ஜியோ நிறுவனம் ஏடிஎம் வழியாக ரீ சார்ஜ் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளார்கள். 

HOW TO RECHARGE YOUR RELIANCE JIO NUMBER USING AN ATM

  • உங்கள் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகவும்.
  • மெனுவில் இருந்து Recharge என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
  • உங்கள் JIO தொலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு, OK / ENTER பொத்தானை அழுத்தவும்
  • இப்போது உங்கள் 4 இலக்க ATM PIN நம்பரை உள்ளிடுங்கள்.
  • எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ அந்த தொகையை சரியாகப் பதிவிடுங்கள்.
  • ENTER பட்டனை அழுத்துங்கள்.

இந்த வசதி AUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India போன்ற வங்கிகளின் மட்டும் தற்போதைக்கு கிடைக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளார்கள்.