Airtel Prepaid recharge plans | Airtel Expands Rs. 129 And Rs. 199 Prepaid Plan
Airtel Rs 129 and Rs 199 prepaid plans : ஏர்டெல் கடந்த மே மாதம் ரூ. 129 மற்றும் ரூ. 199 பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது. முதலில் குறிப்பிட்ட சில வட்டங்களில் மட்டுமே கொண்டு வரப்பட்ட இந்த பிளான், தற்போது இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் இந்தப் பிளானை ஏர்டெல் விரிவுபடுத்தி உள்ளது.
ஏர்டெல் ரூ.129 ரீசார்ஜ் திட்டம் :
129 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடேட் லோக்கல் கால், எஸ்டிடி கால், ரோமிங் கால் கிடைக்கின்றன. மேலும், 300 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகின்றன. இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் திட்டம் :
199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால். இதன் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.