பழைய ஆண்ட்ராய்ட் மொபைலை சிசிடிவி கேமரா போன்று பயன்படுத்தலாம் !

உங்கள் வீட்டில் உள்ள பழைய மொபைலை இலவசமாக சிசிடிவி கேமரா போன்று நீங்கள் மாற்றி பயன்படுத்தலாம்.

இலவசமாக சிசிடிவி கேமரா ?

வீட்டிற்கு சிசிடிவி கேமராவை வைக்க வேண்டுமென்றால் சில ஆயிரங்கள் சில லட்சங்கள் கூட சிலர் செலவு செய்கின்றார்கள். எந்தச் செலவும் செய்யாமல் உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மொபைலை பயன்படுத்தி உங்கள் வீட்டில் சிசிடிவி கேமரா போன்று ஒரு கண்காணிப்பு கேமராவை உங்களால் ஏற்படுத்த முடியும்.

இதற்கு பல்வேறு அப்ளிகேஷன்கள் இருந்தாலும் “Alfred Home Security Camera” என்கின்ற அப்ளிகேசன் தான் பெரும்பாலான மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களுடைய மொபைல் போனில் நீங்கள் பார்க்கலாம்.

இந்த செயலி இலவசமாக கிடைக்கின்றது இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலை சிசிடிவி கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி ?