The Best Android Apps (December 2019) | The best free Android apps of 2019
ஒவ்வொரு மாதமும் சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பற்றி நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த 5 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த ஐந்து அப்ளிகேஷனும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Photo Editor Pro – Polish
இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய புகைப்படத்தை நீங்கள் மிக அழகாக எடிட் செய்து கொள்ளலாம். எடிட் செய்த புகைப்படத்தை உங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
Tamil Fm Radio
இந்த அப்ளிகேஷன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள மிகப் பிரபலமாக இருக்கும் வானொலிகளை நீங்கள் கேட்கலாம். அது மட்டும் இன்றி தொலைக்காட்சி செய்திகளும் நீங்கள் இதில் கேட்கலாம்.
MV Master – Video Status Maker
இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்காக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை நீங்களே உருவாக்கலாம்.
DOUPAI – DOUPAI Face
இந்த அப்ளிகேஷனில் உள்ள வீடியோக்களில் இருக்கும் புகைப்படத்தை எடுத்துவிட்டு உங்களுடைய புகைப்படத்தை அதில் வைத்து வீடியோவை எடிட் செய்து கொள்ளலாம்.
குறிப்பாக உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அவர்களுடைய புகைப்படத்தை பயன்படுத்தி அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.
Brave Privacy Browser
பெரும்பாலான பிரவுசர்கள் உங்களுடைய தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு விளம்பரங்களை அதிகம் உங்களுக்கு காண்பிக்கும்.
ஆனால் இந்த பிரவுசர் உங்களுடைய எந்த ஒரு தகவல்களையும் இது சேகரிக்கிறது. இந்த பிரவுசர் மூலமாக நீங்கள் எந்த இணைய தளத்திற்கு சென்றாலும் அதில் விளம்பரம் உங்களுக்கு காண்பிக்காது.