மாதம் 45 ரூபாய் கட்டாவிட்டால் ஏர்டெல் பயன்படுத்த முடியாது : Airtel hikes minimum recharge for prepaid users

மாதம் 45 ரூபாய் கட்டாவிட்டால் ஏர்டெல் பயன்படுத்த முடியாது : Airtel hikes minimum recharge for prepaid users 

ஜியோ வருகைக்கு பின்பு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது வருகின்றார்கள்.

சமீபத்தில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்தால் மட்டும் தான் தங்களுடைய சேவைகளை தொடர முடியும் என தெரிவித்தார்கள்.

ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ் மற்றும் இன்கமிங் அமைப்புகள் எதுவும் நீங்கள் பெறமுடியாது என தெரிவித்தார்கள்.


ஏற்கனவே மாதம் 23 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டும் தான் இன்கமிங் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற முடியும் என இருந்தது, அதை தற்போது 45 ரூபாயாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தி உள்ளார்கள்.
இது பழைய கட்டணத்தை ஒப்பீடு செய்யும் போது 95% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை ஏர்டெல் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு செய்தியாக அளித்துள்ளது விரைவில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.