வோடபோன் மூடப்படுமா ? Vodafone Idea News | Vodafone Idea loss | Tech News in Tamil

வோடபோன் மூடப்படுமா ? Vodafone Idea News | Vodafone Idea loss | Tech News in Tamil

Credit : Vodafoneஇதனிடையே உச்ச நீதிமன்றம் கொடுத்த ஒரு தீர்ப்பு காரணமாக மீண்டும் மிகப்பெரிய இழப்பை வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய 92 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 


இதைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.


இந்தத் தொகையை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதையொட்டி இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த மேல் முறையீட்டு வழக்கிலும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில். இரு நிறுவனங்களும் இந்த நஷ்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது பொறுத்திருந்து பார்க்கலாம். இதையொட்டி இரு நிறுவனங்களும் மத்திய அரசிடம் சலுகைகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.