வாட்ஸ்அப் தொழில்நுட்பக் கோளாறு ! என்னதான் பிரச்சனை ? Whatsapp Problem Users Can Not Send Images Videos Stickers Media Files

வாட்ஸ்அப் தொழில்நுட்பக் கோளாறு ! என்னதான் பிரச்சனை ? Whatsapp Problem Users Can Not Send Images Videos Stickers Media Files

வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதற்கு பிறகு பல்வேறு புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் கொண்டுவந்தாலும் தொடர்ந்து பலமுறை தொழில்நுட்ப கோளாறுகளும் வாட்ஸப்பில் ஏற்பட்டு வருகின்றது.

வாட்ஸ்அப் அப்ளிகேசனை பல மில்லியன் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.


இந்து தொழில்நுட்ப கோளாறு பற்றி வாட்ஸ்அப் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது இதன் இடையே வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் ஏன் இந்த தொழில்நுட்ப கோளாறு என்ற கேள்விகள் இணையத்தில் பரவலாக இருந்தது.

பல வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் நிறுவனத்தை சமூக வலைத்தளங்களில் கேள்விகள் மூலம் துளைத்து எடுத்தார்கள். இதனிடையே இந்த தொழில்நுட்பக்கோளாறு விரைவில் வாட்ஸ் அப் சரி செய்து விட்டார்கள்.

ஏன் இதுபோல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பதைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வாட்ஸ்அப் வெளியிடவில்லை.