மார்ச் 1 முதல் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் குறைகிறது ? TRAI New Cable TV /DTH Rules 2020 | Trai New Cable Tv & Dth Channel Rates March 2020

மார்ச் 1 முதல் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் குறைகிறது ? TRAI New Cable TV /DTH Rules 2020 | Trai New Cable Tv & Dth Channel Rates March 2020

Trai New Cable Tv & Dth Channel Rates March 2020 in TamilNadu – கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் TRAI டிடிஹெச் மற்றும் கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறை மார்ச் 31ம் தேதி முதல் அமல்படுத்தியது.

இதன் மூலமாக கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பார்த்ததை விட கேபிள் மற்றும் டிடிஹெச்கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது. 

அதுமட்டுமின்றி ஆரம்பத்தில் பல கட்டண சேனல்கள் தங்களுடைய கட்டணங்களை பலமடங்கு அதிகரித்து இருந்தார்கள் ஆனால் அதில் ஒரு சில சேனல்களை மட்டும் மக்கள் பணம் கட்டி பார்த்தார்கள் மற்ற எந்த சேனல்களையும் மக்கள் தேர்வு செய்யவில்லை.

இதன் காரணமாக பல சேனல்கள் தங்களுடைய சேவையை நிறுத்தி விட்டார்கள் இதை கருத்தில் கொண்டு (TRAI) தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 



TRAI New Cable TV /DTH Rules 2020 | Trai New Cable Tv & Dth Channel Rates March 2020


மார்ச் 1-ம் தேதி முதல் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் குறைகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்ராய் வெளியிட்டுள்ளது.

முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்களே கிடைத்துக் கொண்டிருந்தது ஆனால் தற்போது ட்ராய் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் 200 சேனல்கள் மாதத்துக்கு 130 ரூபாய் (வரி உட்பட) மதிப்பில் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி ஒரே வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை வைத்திருந்தாள்  கூடுதல் இணைப்புகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் 6 மாதம் அல்லது அதற்கு மேலான நீண்டகால சந்தா செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு சலுகைகளை வழங்க ட்ராய் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு கூடுதல் 20 சேனல்களுக்கும் 25 ரூபாய் கட்டணமாய் விதிக்கப்படும். இந்தக் கட்டண அமைப்புக்குள் தூர்தர்ஷன் சேனல் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புதிய திட்டத்தை மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்த டிராய் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.