பிஎஸ்என்எல் 1999 திட்டம் : Bsnl 1999 Prepaid Plan Recharge | Republic Day Offer
பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு தங்களுடைய 1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்கள்.இந்தத்திட்டத்தில் வேலிடிட்டியை கூடுதலாக 71நாட்களுக்கு அதிகரித்து உள்ளார்கள்.
ஏற்கனவே இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு(ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பு), தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 365 நாட்களுக்கு கொடுத்தார்கள்.
தற்போது இதே சலுகைகளை 71நாட்களுக்கு அதிகரித்து 436 நாட்கள் கொடுக்கின்றார்கள். இந்த சலுகை உங்களுக்கு கிடைக்க ஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020-க்கு இடையில் இந்த ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.