எதனால் வாட்ஸ் அப்பில் பிரச்சனை ஏற்பட்டது ? Why Whatsapp Down

எதனால் வாட்ஸ் அப்பில் பிரச்சனை ஏற்பட்டது ? Why Whatsapp Down 

ஜனவரி 19 ஆம் தேதி வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் பிரச்சினைகள் ஏற்படுவது இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்தப் பிரச்சினை இருந்தது.

இந்த பிரச்சனை இருக்கும்போது வாட்ஸ்அப் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் சற்று தாமதமாக இந்த தொழில்நுட்ப கோளாறு பற்றி வாட்ஸ்அப் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் விளம்பரம் போடுவதற்கான பணிகளை வாட்ஸப் முன்னெடுத்துள்ளது அதற்கான பல்வேறு அப்டேட் வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் விளம்பரம் போடுவதை வாட்ஸ்அப் நிறுவனம் கைவிட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே கொடுத்த அப்டேட்டில் சில மாற்றங்கள் செய்ய வாட்ஸ்அப் முயன்றுள்ளது அதன் காரணமாக வாட்ஸ்அப்பில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தற்போது வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.